வர்த்தக சங்கம் அமைப்பதற்கு ஹட்டன் வர்த்தகர்கள் விசனம்!
ஹட்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக சங்கம் சட்ட ரீதியாக அமைக்கப்படவில்லையென ஹட்டன் நகரில் வர்த்தக உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் அழகமுத்து நந்தகுமார் தலைமையில் ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நேற்று (08)மாலை தீபாவளி பண்டிகைக்கு வீதி வியாபரம் செய்வதை பற்றி கலந்துரையாடுவதற்கு வர்த்தக உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அதைப்பற்றி ஒருவார்த்தையும் பேசாது தனக்கு வேண்டியவர்களை வைத்து புதிதாக வர்த்தக சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஏனைய வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான ஒரு சங்கம் அமைப்பதாக இருந்தால் கூட்டத்தை ஒழுங்கமைப்பதற்கு பல நாட்களுக்கு முன்னால் எழுத்து மூல அறிவித்தல் ஒன்றின்மூலம் தெரியப்படுத்த வேண்டும். சங்கத்திற்குரிய யாப்பு ஒன்று அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை யாப்பு ஒன்றும் இல்லாது மாதத்திற்கு 500 ரூபாப்படி ஒரு வருடத்திற்கான தொகையை கட்டாயம் கட்டும்படியும் அங்கு கேட்கப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment