ஒரு கோடி ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் சீன வியாபாரி கைது!
ரூபா ஒரு கோடி பெறுமதியான வல்லப்பட்டையுடன் சட்ட விரோதமான முறையில் திருட்டுத் தனமாக சீனாவுக்கு எடுத்துச் செல்ல முயன்ற 43 வயதுடைய சீன வியாபாரி ஒருவர் நேற்று (01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க சட்டப் பிரிவின் பணிப்பாளருமான லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
குறித்த சீனர் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணம் மேற்கொள்வதற்காக பரிசோதனைக்குட்படுத்தப்படும் இடத்தில் நடந்து கொண்ட விதத்தை அவதானித்த அதிகாரி ஒருவர் அவர் மீது சந்தேகம் கொண்டு அவரைப் பரிசோதித்த போதே அவரிடமிருந்த வல்லப்பட்டை தொடர்பாக தெரியவந்துள்ளது.
குறித்த சீனருக்கு ஆங்கிலம் கதைக்கத் தெரியாது என்பதால், சீனரிடமிருந்து மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக சீன மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியைப் பெறுவதற்காக ஆவன செய்துள்ளது.
நேற்று (01) மாலை நேரமாகியும் இதுதொடர்பில் சீன வியாபாரியிடமிருந்து தகவல்களைப் பெற சுங்க அதிகாரிகளால் முடியாது போயுள்ளது. அதற்குக் காரணம் மொழிபெயர்ப்புப் பிரச்சினையே என தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
சட்ட விரோதமாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வல்லப்பட்டை எடுத்துச் செல்லும் ஏழாவது முறை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment