வட மாவட்டச் செயலாளருக்கு காலி சிறைச்சாலை அதிகாரியிடமிருந்து கொலை அச்சுறுத்தல்!
வட மாகாணத்தில் அரச சேவையில் தற்போதுள்ள மாவட்டச் செயலாளரின் காலியில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்றுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் மாவட்டச் செயலாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளது தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்ற வெள்ளிக்கிழமை (29) இரவு வீட்டுக்கு வரும்போது பாதையை மறித்து மோட்டார் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததுடன் மற்றொரு வாகனம் அதன் பின்புறமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாகனங்களுக்கும் போகமுடியாதிருந்த்தால் வாகனத்தை அப்புறப்படுத்துவதற்காக வந்தவருக்கும், மாவட்டச் செயலாளரின் வாகனச் சாரதிக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் மாவட்டச் செயலாளரின் வீட்டுக்குச் சென்று அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment