அரசாங்கம் வட மாகாண சபைக்கு வழங்கிய பணத்திலிருந்து செய்தது ஏதுமில்லை!
அரசாங்கத்தினால் வட மாகாணத்திற்கு அபிவிருத்திகென வழங்கிய பணத்திலிருந்து குறைந்தளவு நூற்றுக்கு பத்து வீதமேனும் பயன்படுத்தப்படவில்லை என அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிடுகின்றார்.
வட மாகாண சபை, மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கருத்திற்கொள்ளாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருப்பதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
மாகாண சபை அமைக்கப்படுவதற்கு முன் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் கூட இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அது அப்பகுதி மக்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
1 comments :
கூத்தமைப்பு காரர் அந்த பணத்தில் தமது குடும்பம் , உறவுகள் , சொந்தம் பந்தங்களுக்காவது ஏதாவது செய்து இருப்பாங்கள் , எப்படி விட்டாங்கள் ???
Post a Comment