“ஜப்பானியர்கள் திறமையாளர்கள்” என்று சொல்கிறார்கள்.. அவ்வாறானவர்களை நான் இலங்கைக்குக் கொணர்ந்தேன்! - ஜப்பானிய பிரதமர் (படங்கள் இணைப்பு)
சிங்களத்தில் “ஜப்பானியர்கள் திறமையாளர்கள்” என்றொரு கூற்றுள்ளதாக நான் தெரிந்து கொண்டுள்ளேன். அக்கூற்றுக்கு ஏற்றாற் போல மீத்திறன் மிக்க வியாபாரத் தூதுக் குழுவினரை தான் இலங்கைக்கு அழைத்து வந்ததாக ஜப்பானியப் பிரதமர் குறிப்பிடுகின்றார்.
ஜப்பானியப் பிரதமர் சின்ஸோ அபே நேற்று (07) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா - ஜப்பான் வியாபாரிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் உரையாற்றும்போது, ஜப்பானிலுள்ள மிகவும் சிறந்து விளங்கும் வியாபார நிறுவனங்களின் வியாபாரக் குழுவினரை தான் இன்று இலங்கைக்கு வரும்போது அழைத்து வந்திருப்பதாகவும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்கள் தங்களாலான பங்களிப்பை நல்குவார்கள் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். இதனால், இலங்கையின் எதிர்காலம் பற்றி மனதிற் கொண்டு இம்மாநாட்டிலிருந்து பயன்பெறுமாறும் ஜப்பானியப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
தான் ஸ்ரீஜயவர்த்தனபுரக் கோட்டையை (நகரத்தை) பார்வையிடச் சென்றதாகக் குறிப்பிட்ட ஜப்பானியப் பிரதமர், ஜே.ஆர். ஜயவர்த்தன 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற சான்பிரான்சிஸ்கோ சமாதான கூட்டமைப்பு மாநாட்டில் ஜப்பானை சர்வதேச சமூகத்தின் அங்கத்துவ நாடாக தான் கருதுவதாகக் குறிப்பிட்டு, அந்நாட்டில் நிர்மாணித்தது பற்றியும் நினைவுறுத்தினார்.
ஜப்பானிய உதவியுடன் கட்டியெழுப்பப்பட்ட ஜெப்ரிபாவா என்ற உயர் கட்டடக் கலைஞரால் நிர்மாணிக்கப்பட்ட பாராளுமன்றத்தைப் பார்வையிடத் தான் சென்றதாகவும் சின்ஸோ அபே குறிப்பிட்டார்.
(கேஎப்) - படங்கள் -ஜனாதிபதி ஊடகப் பிரிவு
0 comments :
Post a Comment