சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம, இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்படுகின்ற இலஞ்சம், மற்றும் ஊழல்களை இல்லாதொழிப்பதற்காக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குற்றப்புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் வசம் பொறுப்புச் சாட்டுவதற்கு ஆவன செய்துள்ளார்.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக, கொழும்பு சிறைச்சாலையின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து சிறைச்சாலை குற்றப்புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் வசம் வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.
(கேஎப்)
No comments:
Post a Comment