பொலிஸாருடன் தேர்தல் செய்யவியலாது!
அதிகரித்துச் செல்லும் தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியில்லை எனவும், இதனால் எதிர்வரும் தேசிய தேர்தலில் மிகப்பெரும் பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புள்ளன என்றும் பெபரல் அமைப்பு குறிப்பிடுகின்றது.
ஒரு மாகாணத்தில் மாத்திரம் தேர்தல் நடைபெறும் போதுகூட இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த இயலாதுவிட்டால் இலங்கை முழுதும் தேர்தல் நடாத்தப்படுகின்ற போது, இந்நிலை மேலும் அதிகரிக்கும் எனவும் அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டி ஆராச்சி தெளிவுறுத்துகின்றார்.
இந்த அசமந்த நிலையை மாற்றுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்க்ப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment