கண்டி நகராதிபதியின் பாதுகாவலரது கைத்துப்பாக்கி அபேஸ்...!
கண்டி நகராதிபதி மகேந்திர ரத்வத்தவின் உத்தியோகபூர்வ கைத்துப்பாக்கியைப் பறித்துச் சென்றுள்ளதாக கண்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டு பின்னர், தனது பாதுகாப்பாளருடன் தனது வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, சிவப்பு நிற டிபெண்டர் வகையிலான ஜீப் வண்டியில் வந்த ஒரு குழுவினர் நகராதிபதியின் வாகனத்தை நிறுத்தி, அங்கு வந்திருந்த ஒருவர் பாதுகாப்பாளரின் கையில் இருந்த ஆயுதத்தைப் பறித்துச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் எழுதப்பட்டுள்ளது.
நகராதிபதியின் பாதுகாவலர் ஒருவர் விடயம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment