தனது காதலியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லியும் அவள் வேலைக்குச் சென்றதால் விரக்தியுற்ற இளைஞர் தனக்குத் தானே தீமூட்டி மரணமாகியுள்ளனான். கடந்த 4ம் திகதி காதலி வேலை செய்யும் இடத்திற்கு அருகில் தனக்குத் தானே தீமூட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் குறித்த இளைஞன் நேற்று முன்தினம் மரண மாகியதாக தெரியவருகின்றது.
இளைஞன் பிரபல அச்சகம் ஒன்றின் உரிமையாளராவார். இவர் காதலித்த யுவதியின் நடத்தை பற்றி இளைஞனின் பெற்றோர் இளைஞனுக்கு தெரிவித்து காதலியை மறக்குமாறு தெரிவித்ததாகவும் ஆனால் குறித்த இளைஞன் பெற்றோரின் புத்திமதியைக் கேளாது யுவதியைத் தொடர்ந்து காதலித்து வந்துள்ளான்.
இதே வேளை குறித்த யுவதி தான் வேலை செய்யும் இடத்தில் இன்னொருவருடன் தொடர்பாக இருப்பதாக அறிந்த இளைஞன் யுவதியை வேலைக்குச் செல்ல வேண்டாம எனத் தெரிவித்துள்ளான். இருந்தும் யுவதி இளைஞனின் சொல்லைக் கேளாது தொடந்து அங்கு வேலைக்குச் செல்லவே அதனால் வெறுப்புற்ற இளைஞன் தனக்குத் தானே தீமூட்டியதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வருடத்துக்குள் நான்கு இளைஞர் கள் காதலிகளால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment