போக்குவரத்து ஒழுங்குகளை மீறும் பஸ் வண்டிகளை நீதிமன்றில் நிறுத்துவதற்கு ஆணை!
நாடெங்கிலும் பெருந்தெருக்களில் வீதி ஒழுங்கினைக் கருத்திற் கொள்ளாத மக்கள் போக்குவரத்து பஸ் வண்டிகளுக்காக எதிர்வரும் காலங்களில் தண்டப் பத்திரம் வழங்கப்படக் கூடாது எனவும், நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பொலிஸ் நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
பஸ் வண்டிகளால் ஏற்படும் விபத்துக்களின் தொகையில் அதிகரிப்பைக் கருத்திற் கொண்டே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், பஸ் வண்டிகள் தொடர்பில் சட்ட திட்டங்களை மீறும் வழக்குகளைப் பெற்றுக் கொள்ளும்போது, பொலிஸார் கவனத்திற் கொள்ள வேண்டிய 14 விடயங்கள் பற்றியும் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.
நுழைவிடங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், முன்பக்கமாக நடாத்துநர் ஏறிக் கொண்டு பயணம் செய்கின்ற ஏனைய வாகனங்களிலிருந்து இடம் கேட்டல், ஒரு கையால் சுக்கானை இயக்கிக் கொண்டு செல்லுதல் முதலிய விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment