பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தனது டூவிட்டர் இணைய தளம் பக்கத்தில் 'தமிழக அரசு தீவிரவாத அமைப்புடன் நட்புடன் உள்ளது. அண்மையில் கூட விடுதலை புலிகள் இயக்கத்தின் நிர்வாகியாக இருந்த மறைந்த திலீபனுக்கு நினைவு தினத்தை கடைப்பிடிக்க தமிழக பொலிசார் அனுமதி வழங்கியுள்ளனர் என தெரிவித்த கருத்த தொடர்பில் சுப்பிரமணியசாமி மீது முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் தமிழக முதலமைச்சர் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுப்பிரமணிய சாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த முதன்மை நீதிபதி ஆதி நாதன், வழக்கின் நகல்களை பெறுவதற்காக எதிர்வரும் அக்டோபர் 30–ம் திகதி சுப்பிரமணியசாமி நேரில் ஆஜராக வேண்டும்' என்று சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment