தற்போது சிறைச்சாலைகள் பல்கலைக்கழகங்களாக மாறியுள்ளது!
தற்போது நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக்கழகங்களாக மாறியுள்ளன என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர் சந்திரசிரி கஜதீர குறிப்பிடுகின்றார்.
பதுளை சிறைச்சாலை ஆய்வுக்கான சுற்றுலாவில் கலந்துகொண்ட வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்..
“சிறைச்சாலைகள் திணைக்களத்தை நாங்களே தேடிச் செல்ல வேண்டியுள்ளது. நாட்டில் குற்றவாளிகள் எவ்வளவுபேர் இருந்தாலும் அவர்கள் தற்போது நல்ல நிலையில் இருக்கின்றார்கள். சிறைக்கைதிகளை சிறைச்சாலையில் முடக்கி வைக்காமல் அவர்களை புனருத்தாபனம் செய்கின்றோம். அவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கின்றோம். நீங்கள் அனைவரும் நாட்டுக்காக சிறந்த சேவையாற்றுங்கள்” எனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment