Monday, September 1, 2014

பதுளை வர்த்தக நிலையத்தில் தீ!

பதுளையில் வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதுளை நகரில் தேவாலய வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடமொன்றில் நேற்று முன்தினம் (30 அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் தீ பரவியுள்ளது.

தீயால் கட்டடத்தின் கீழ் மாடி முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் தீயால் கட்டடத்தின் இரண்டு மாடிகளில் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இரு மாடியிலுள்ள இலட்சக்கணக்கான பெறுமதிமிக்க பொருட்களும், உடமைகளும் சேதமாகியுள்ளன.

இச்சம்பவத்தின் போது கடையை திறந்து முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுக்க முயற்சித்த அதன் உரிமையாளா் உடற் பகுதிகளில் தீக்காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

No comments:

Post a Comment