இலங்கையில் நூற்றுக்கு 99 வீதமானோருக்கு மூன்று வேளை சாப்பிடுவதற்கும் இன்றி மிகவும் கஷ்டப்படுகின்ற நிலையில், 1% மானோர் மாத்திரம் ரூபா. 200 கொடுத்து அப்பம் சாப்பிட்டு படாடோப வாழ்க்கை வாழ்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதுளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.
மூன்று வேளை சாப்பிட இல்லாமல் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது வீதமானோர் ஒரே உலகில் அல்லலுறும்போது ரூபா 200 கொடுத்து அப்பம் வாங்கி சுகபோக வாழ்வு நடாத்துகின்ற மற்றொரு பகுதி இருக்கக் கூடிய முறையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டை ஓட்டிச் செல்கின்றார் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.
ராஜபக்ஷ ஆட்சியில் ரூபா 200 இற்கு அப்பம் சாப்பிடுகின்ற மக்கள் ஊவாவில் இருக்க முடியாது. அதற்கான வழிவகை அவர்களுக்கு இல்லை என்பதைத் தெளிவுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் சசீந்ர ராஜபக்ஷ மற்றும் கூட்டணி அரசாங்கம் கடந்த தசாப்தத்தில் ஊவா மக்களுக்கு வழங்கிய பரிசு மிகவும் வறிய மாகாணம் ஊவா மாகாணம் என்ற பெயர் மட்டுமே.
ஐக்கிய தேசியக் கட்சி இவர்களின் கண்துடைப்பிலிருந்து ஊவா மக்களைப் பாதுகாக்கும் என்பதை மக்கள் நம்பலாம் எனவும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
No comments:
Post a Comment