இலங்கைப் பணத்தில் 30 வீதமானவை கறுப்புப் பணமே! - வாசுதேவ நாணயக்கார
இலங்கையில் 30% வீதமான பணம் கறுப்புப் பணமாகவே கைம்மாற்றப்பட்டு வருவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகின்றார்.
இலங்கை மின்சார சபையின் கலவான உல்லாச நிகேத்தனில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“அரசாங்கத்தினால் கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கப்பட வேண்டும். வரிப்பணம் முறைப்படி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் கல்வி, சுகாதாரம் முதலிய செயற்றிட்டங்களுக்கு பணம் பெற்றுக் கொள்ளமுடியும். சமூர்த்தி அனைவருக்கும் தேவையில்லை. மிகவும் வறிய மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் பொருட்பொதியைப் பெற்றுக் கொடுக்குமாறு நாங்கள் பலமுறை சொல்லி வந்துள்ளோம். வரவு செலவுத் திட்டத்தில் அது பற்றி வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 3 வருடங்களாகியும் பொருட்பொதி கிடைக்கவில்லை. நாங்கள் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து பல யோசனைகளை முன்வைப்பது போலவே, விமர்சனமும் செய்கிறோம். வரிக் கொள்கையை மாற்றியமைக்குமாறு சொன்னோம். “வெட்” வரி நீக்கப்பட வேண்டும். பாரியளவிலான வியாபாரங்களை மேற்கொள்பவர்களிடத்தும், தனவந்தர்களிடமிருந்தும் வரி அறிவிடப்பட வேண்டும். ஏழைகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது. இன்று நாட்டில் 30% கறுப்புப் பணம் வலம்வருகின்றது. இலங்கையிலிருந்து எவ்வளவு தொகையையும் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கான வழியுள்ளது. கட்டுப்பாடு எதுவும் இல்லை. இதுதொடர்பில் கட்டுப்பாடு அவசியம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment