TNA உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக கொலைக் குற்றம்...!
செல்வம் அடைக்கலநாதன், அரினேந்திரன், பீ. செல்வராஜா, யோகேஷ்வரன் எனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் கொலையில் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழ் விடுதலை அமைப்பின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் இதுதொடர்பில் ஒரு குழுவினை நியமித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2004.10.19 ஆம் திகதி மட்டக்களப்பு, கல்வியகாடு பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, பின்னர் இவர்கள் நால்வரினதும் பாராளுமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி வைக்குமாறும் ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
1 comments :
PLOTE வசந்தன் M.P யின் கொலை சம்பந்தமாகவும் செல்வத்திடம் விசாரிக்க வேண்டும் , அத்துடன் IPKF காலத்தில் நடந்த உட்படுகொலைகள் சம்பந்தமாகவும் செல்வத்திடமும் டெலோ வட மாகாண சபை உறுப்பினர் விந்தனிடமும் விசாரிக்க வேண்டும், பாதுகாப்பு அமைச்சு இது சம்பந்தமாக இந்திய புலனாய்வு பிரிவுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் , மேலதிக விபரங்கள் சரியான சந்தர்ப்பத்தில் ஐரோப்பாவில் இருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவிக்கப்படும்.
இந்த கொலை காரங்களை தெரிவு செய்த படியால் தான் இன்று வட மாகாணம் தண்ணி இன்றி தவிக்குது , எத்தனையோ எம் அருமை போராளிகளை புலிகள் உயிருடன் கொழுத்தும் பொது cokecola கொடுத்து புலிகளை உசார் படுத்திய இனம் அல்லவா ? இப்பவும் சொல்லுறன் இவங்கள் இன்னும் அனுபவிப்பங்கள் , கட்டாயம் இன்னும் அனுபவிக்க வேண்டும்.
இந்த விடையத்தை கையில் எடுத்த சங்கரி ஐயாவுக்கு மிகவும் நன்றி.
Post a Comment