SMS இன் காரணமாக இன்று அரச ஊழியர்களுக்கு சரிவர கடிதமொன்று எழுதத் தெரியாது!
இன்று அரச ஊழியர்களும் அதிகமதிகம் தொலைபேசிகளில் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தியை அதிகம் பயன்படுத்துவதால், அவர்களுக்கு சரியாக ஒரு தொழின்முறைக் கடிதம் கூட எழுத முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஏதேனும் ஓர் இலக்கு இன்றி சிந்திக்கத் தொடங்கியுள்ள அரச ஊழியர்களில் பெரும்பாலானோர் புதிதாக நியமனம் பெறும்போதேனும் குறிக்கோள் ஒன்றுடன் செயற்பட வேண்டும் எனவும் சந்திரனை நோக்கிக் கல் எறிந்தால் சிலவேளை நட்சத்திரம் ஒன்றுக்கேனும் போய் படக்கூடிய வாய்ப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாண சபையில் அரச முகாமை உதவியாளர்கள் 121 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு முதலமைச்சர் அலுவலகத்தில் நடந்தேறிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“என்றும் அரச ஊழியர்கள், சார், நான் செய்துதான் அனுப்பினேன் என்றாலும் திருப்பி அனுப்பியிருக்கிறார்களே என்று சொல்கிறார்கள். ஏன் மீண்டும் செய்து அனுப்பப்படுகின்றது என்பதை தேடிப்பார்த்தால், அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறைபாடு உள்ளமை தெரியவருகின்றது. இன்று எங்களுள் பெரும்பாலானோருக்கு கடிதம் ஒன்று எழுதத் தெரியவில்லை.
தற்போது எஸ்.எம்.எஸ் சேவையும், புதுப்புது கைப்பேசிகளும் வந்திருப்பதனால் கடிதம் எழுதும் ஆற்றல் மிகக் குறைந்துள்ளது. தொடர்பாடல் திறன் அரச சேவைக்கு மிகவும் வேண்டத்தக்கதாகும். எங்களுக்குள் இருக்கின்ற மிகப்பெரும் இயலாததன்மை கடிதம் ஒன்று எழுத முடியாத தன்மையாகும். அதற்குச் சிறந்த மாற்றுவழி என்னவென்றால் அவர்களுக்கு அதில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். திருப்பியனுப்பப் படுகின்ற ஏழு எட்டு கடிதங்களைக் கொண்டுவந்து, இவர்களுக்குக் காட்டி ஏற்பட்டுள்ள பிழைகளை அவர்களுக்கு எடுத்துக்காட்டி கற்பித்தால் அவர்கள் சரிவரக் கற்றுக் கொள்வார்கள்” எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment