Thursday, August 7, 2014

முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் குழப்பங்களை உருவாக்க போலியான SMS அனுப்பிய முஸ்லிம் இளைஞர்கள் விளக்கமறியலில்!

போலி தகவல்கள் அடங்கிய குறுந்தகவல் அனுப்பிய குற் றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மஜிஸ்திரேம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் குழப்பங்களை உருவா க்கும் வகையில் போலியான குறுந்தகவல்களை அனுப்பிய தாக, 4 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு ள்ளது. இவர்களது கையடக்க தொலைபேசி மூலம் மேற்குறித்த குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டமை, நிரூபணமாகியுள்ளதாக, பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவி த்தனர்.

திட்டமிட்ட ரீதியில் இவ்விடயம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய பொலிஸார், இவ் 4 சந்தேக நபர்கள் மற்றும் இவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள தொடர்புகள் தொடர்பாக விசாரணை நடாத்த வேண்டியுள்ளதாகவும், தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், குறித்த சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடுமாறு, பொலிஸார், நீதிமன்றத்தில் வேண்டுகோளை முன்வைத்தனர். இதனையடுத்து கொழும்பு மாவட்ட நீதவான் ஜிஹான் பிலபிட்டிய, சந்தேக நபர்களை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேக நபர்களின் கையடக்க தொலைபேசிகள், கொழும்பு பல்கலைக் கழக கணனி பீடத்திற்கு அனுப்பி அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளுமாறும், நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com