மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்...
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா சினிசிட்டா மைதானத்திற்கு அருகாமையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளை வீதியை நோக்கி முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் பின்னால் சென்ற மோட்டா் சைக்கிள் மோதுண்ட வேளையில் மோட்டார் சைக்களின் பின்னால் சென்ற ஜீப் ரக வாகனம் மோட்டார் சைக்களில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து நேற்று (15) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
மோட்டார் சைக்களை செலுத்தியவரே படுங்காயத்திற்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதில் 3 வாகனங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு ஜீப் ரக வாகனம் குடைசாய்ந்துள்ளது. மோட்டார் சைக்களை செலுத்தியவரின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நோ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment