இரு பஸ்கள் ஒனறுடன் ஒன்று மோதியதால் விபத்து! மத்தளை தம்புள்ளையில் சம்பவம்
நாஉல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை தம்புள்ளை பிரதான வீதியில் நாஉல உடதெனிய பகுதியில் மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் தம்புள்ளையிலிருந்து மாத்தளை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் சுமார் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் இன்று (15) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நாஉல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் நாஉல நாலந்த மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகன சாரதிகளின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நோ்ந்துள்ளதாக நாஉல பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
இவ்விபத்து தொடா்பான மேலதிக விசாரணைகளை நாஉல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க. கிஷாந்தன்)
0 comments :
Post a Comment