மைத்ரிபாலவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்!
ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் செயலாளர் நாயகம் மைத்ரிபால சிரிசேன, நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு கருத்தும் தங்கள் கட்சிக்கு இல்லை எனக் குறிப்பிட்டது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப் பினர்களிடையே பெரும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகின்றது எனத் தெரியவருகின்றது.
எதிர்வரும் நாட்களில் இதுதொடர்பில் வெளிப்படையாகத் தெரிவிக்கவுள்ளார்கள் எனத் தெரியவருவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லா தொழிக்க வேண்டும் என்ற கருத்துடன் இருக்கும் நிலையில், இவ்வாறு எதிர்பாராத விதமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளவியலாது எனவும் அக்கட்சியின் உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கருத்துடையவராக மைத்ரிபால சேனாநாயக்க ஏன் இவ்வாறு குறிப்பிட்டார் என்பது பற்றி கட்டாயம் விசாரித்து அறிய வேண்டும் எனவும் உப தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment