த.தே.கூ. விற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பானது இலங்கைக்கு ஐஸ் வாளி சவால் என அரசியல் விமர்சகரும் முன்னாள் இரா ஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜய திலக்க தெரிவித் துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் வருமாறு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமை தொடர்ச்சியாக அழைத்தது அனால் த.தே.கூ அதனை நிராகரித்து வந்தது. இதனைத்தொடர்ந்து தென் ஆபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ராமபோஸா, யாழ்ப்பாணம் சென்று முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார்.
இதன் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தார். இதன் பின்னர் இந்திய பிரதமர் சந்தித்தார். இந்த பேச்சுவார்த்தையை பார்க்கும் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை போல் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு காணப்பட்டது.
நரேந்திர மோடி பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைக்க வேண்டாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார். எனினும் மோடி, மகிந்த ராஜபக்ஷவை அழைத்தார். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டே இருந்தது.
அப்போது இலங்கைக்கு சிறந்த சந்தர்ப்பமும் இருந்தது. நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் மோடி 13வது திருத்தச் சட்டம் குறித்து நினைவுபடுத்தினார். ஆனால், இலங்கை அரசாங்கம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், 13வது திருத்தச் சட்டம் பற்றி பேசிய குறித்து குறிப்பிடவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமரை மாத்திரம் சந்திக்கவில்லை. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் சந்தித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தை சேர்ந்த எவரையும் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் இதுவரை சந்திக்கவில்லை. அயல் நாட்டுடன் மேற்கொள்ளும் தொடர்புகளில் குறித்த முகாமைத்துவத்தின் குறைபாட்டையே இது காட்டுகிறது எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment