Wednesday, August 6, 2014

ராஜித்த புலிகள் குண்டு தயாரிப்பதற்கு உதவி செய்தார்! - ஞானசார தேரர்

அமைச்சர் ராஜித்த சேனாரத்ன போர்க் காலப்பகுதியில் புலிகள் குண்டுகள் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை வழங்கியவர் எனவும் பல் வைத்தியரான அமைச்சர் ஆறு கப்பல்களின் உரிமையாளர் எனவும் பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்துகின்றது.

ராஜித்த சேனாரத்னவின் பாதுகாப்பு வாகனத்தை உதவியாகக் கொண்டு நகரசபை உறுப்பினர் ஒருவர் BMW மோட்டார் வாகனத்தில் கேரளாவிலிருந்து கஞ்சா வியாபாரம் செய்வதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலளார் கலகொடஅத்தே ஞானசார தேரர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தொடர்ந்து அவர் கருத்துரைக்கும் போது,

“ராஜித்த சேனாரத்ன எல்.ரீ.ரீ.யினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். பாமங்கடை கதிரேசன் வீதியில் கதிரேசன் என்ற ஒருவர் இருந்தார். இவர் இலங்கையிலிருந்து வெளிநாட்டு ஓடிவிடவும், மீண்டும் இலங்கைக்கு வரவும் இவர்தான் பணம் கொடுத்தார். பைசிக்கள் உருண்டைகளைச் சேர்த்து குண்டு உருவாக்குவதற்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைப்பதுதான் இவரது வேலை.

பேருவளையிலுள்ள நகர சபை உறுப்பினர் ஒருவரிடம் பீ.எம்.டப்ளிவ். வாகனமொன்று இருக்கின்றது. அதில்தான் கேரள கஞ்சா இழுப்பது. அதனைப் பாதுகாத்து ராஜித்தவின் பாதுகாப்பு வாகனம் செல்லும்.

புத்தளத்தைச் சேர்ந்த இஸ்மத்தின் தம்பி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையானார். போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளி. அரசியல்வாதிகள் போதைப் பொருளின் பின்னணியில் இருக்கின்றார்களா என அரசாங்கம் கேள்வி எழுப்பியதே.. அதோ இருக்கிறார்கள். இவருடன் தான் அவர்கள் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது. அதிஉத்தம அமைச்சர் அவர்.

பல் வைத்தியர் ஒருவர் சாதாரணமாக வருடமொன்றுக்கு எவ்வளவு தேடலாம்? சாதாரணமாக கப்பல் கூட எடுக்க முடியுமா? எனக்குத் தெரியாது அமைச்சர் ஒருவருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கின்றதென. ஒரு இலட்சம் இருக்குமா? ப்ளு ஓஷன் பிஷரி பிரைவட் லிமிடெட் என்ற பெயரில் 8 கப்பல்கள் எடுத்திருக்கின்றார். இப்போது அது சீனக் கம்பனி என்று சொல்வார்.

இவரது செயலாளர் தோன் லலித் அநுர பெரேராவின் முதலீடு 600 மில்லியன். 60% பங்குக்கு உரிமையாளர். இவர்கள் இருவருக்குமிடையே என்னதான் உறவு? ஏன் இவர்கள் இலங்கை மீனவக் கூட்டுத்தாபனத்திற்கு மீன்களை வழங்குவதில்லை. கூட்டுத்தாபனத்திற்கு அன்றி அந்தப் பணம் எங்கேதான் செல்கிறது? இதுபற்றிக் கேட்டுத்தான் ஆக வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com