ஆசிரியையை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்வேன் என்ற கடிதத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை!
பாடசாலை ஆசிரியை ஒருவரை முழந்தாழிட வைத்த வழக்கின் சாட்சியாளர் கொல்லப்பட்டமை மற்றும் ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என முன்னாள வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான ஆனந்த சரத் குமார நவகத்தேகம பொலிஸில் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை நவகத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஆசிரியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் ஆனந்த சரத் குமார கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் குறித்த வழக்கின் முக்கிய சாட்சியாளர் ஒருவர் அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு கடந்த ஐந்தாம் திகதி மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தை அனுப்புபவர் ஆனந்த சரத் குமார எனவும் ´உனது சாட்சியாளரை நான் கொன்றேன். நீ பாதுகாப்பாக இரு எனவும், தனது அரசியல் வாழ்க்கையை முடித்து விட்டதாகவும், ஆசிரியையை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்வதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சாட்சியாளர் கொலை மற்றும் ஆசிரியைக்கு வந்த மிரட்டல் கடிதம் போன்றவற்றுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என பொலிஸில் குறிப்பிட்டுள்ள ஆனந்த சரத் குமார, தனக்கு வேண்டாத நபர்களே தன்னைப் பழிதீர்க்க இவ்வாறு செய்திருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment