அமெரிக்கா சந்தேகத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் எவ்வித உண்மையும் இல்லை! வெளியுறவு அமைச்சு
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கோ அங்குள்ள அதிகாரிகளுக்கோ அல்லது அமெரிக்க பிரஜைகளுக்கு எதிராகவோ ஆர்ப்பாட்டங்களோ பேரணிகளோ நடத்தப்பட வில்லை. அவ்வாறான சம்பவங்கள் நிகழக்கூடுமென தெரி வித்து அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தமது பாது காப்பு தொடர்பாக சந்தேகத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் எவ்வித உண்மையும் இல்லையென வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் சகஜநிலைக்கு எதிராக அபாயகரமான சுற்றுச்சூழல் இருப்பதாக தெரிவித்து அமெரிக்க ராஜங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படுமென இலங்கை அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்கும் உரிமையும் அமைதி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமையும் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். நாட்டின் அரசியல் அமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்தை அனுபவிப்பதை மாத்திரமே இலங்கை பிரஜைகள் மேற்கொண்டுள்ளனர். காசாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் அண்மையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை எதிர்கட்சியினரும் அரசியல் கட்சிகளும் இணைந்தே மேற்கொண்டது.
அதுவும் ஓர் அமைதி ஆர்ப்பாட்டமாகும். இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இந்த எதிர் அரசியல் கட்சிகளுடன் உறவு வைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்கு நாடுகளுக்கு எதிரான ஓரு செயல்பாடு இலங்கையில் இருப்பதாக அமெரிக்காவின் கருத்து தொடர்பாக தெளிவில்லை. அந்த ஆர்ப்பாட்டங்களுக்கான அடிப்படை காரணங்கள் என்னவென அறிந்து இருதரப்பு உறவுகளை சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதே அமெரிக்க அதிகாரிகளின் நோக்காக அமைய வேண்டும். வெளிநாட்டு ராஜதந்திரிகளின் பாதுகாப்பிற்கு இலங்கை தொடர்ந்தும் முன்னுரிமை அளித்து வருகின்றது. தொடர்ந்தும் அமெரிக்க பிரஜைகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர். இதுரை அவர்களுக்கு எவ்வித சவாலும் ஏற்படவில்லை.
இலங்கை அரசாங்கம் சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாப்பதற்கும் இந்த தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு மட்டுமன்றி சகல பிரஜைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments :
Post a Comment