Sunday, August 24, 2014

மீடியா போரத்தினால் பாலித்த தேவப்பெரும கௌரவிப்பு! (படங்கள் இணைப்பு)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19வது தேசிய மாநாடு நேற்று (23) கொழும்பு நூதனசாலை கேட்போர் கூடத்தில் போரத்தின் தலைவர் என் .எம். அமீன் தலைமையில் இடம் பெற்றது.

அந்நிகழ்வின் விஷேட பேச்சாளராக அமைச்சர் பஷீர் சேகுதாவுத் கலந்து கொண்டார்.

அந்நிகழ்வின்போது, ஐக்கிய தெசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவப்பெரும கடந்த ஜூன் 15 ஆம் திகதி அளுத்கம உள்ளிட்ட பகுதிகளில் பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்து மீடியா போரத்தால் நினைவுச் சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்தி விசேடமாகக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

No comments:

Post a Comment