நான் சத்தமிட்டதுதான் அதிகம்.. நடந்தது எதுவுமில்லை…! - பாலித்த
தான் சத்தமிட்டபோதும் நடந்தேறியது ஏதுமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
“சத்தம் போட்டது இப்போது போதும் போல் தோன்றுகின்றது. நடப்பது என்னவென்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அளுத்கம - பேருவல விடயம் தொடர்பிலும் என்னால் இயன்ற மட்டும் சத்தம் போட்டேன் அல்லவா… ஏதேனும் நடந்ததா? அதுதொடர்பில் பாராளுமன்றத்திலும் பேசினேன். விசாரணை நடாத்தப்படும் என்றார்கள். எங்கேதான் விசாரணை நடந்தது? நாட்டில் சட்டம் நிலை நாட்டப்படுவதில்லை. ஒரே குடும்பம் அதிகாரத்தை ஏந்தியிருப்பதால் எல்லாம் அழிந்து போயுள்ளது” என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment