மனைவியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் என்பதை அறிந்த கணவன் தற்கொலை!
மனைவியின் வயிற்றில் 8 மாதம் பூர்த்தியான இரு சிசுக்கள் இருப்பதைத் தெரிந்துகொண்ட, கடன் தொல்லையால் உள்ளம் நொந்துபோயிருந்த கணவனொருவன் தான் இவ்வுலகத்தை எட்டியும் பார்க்காத இரு குழந்தைகளுக்கு ஆடைகள் பலவற்றுடன் தன்னுடைய காதல் மனைவியை அவரின் தாய் வீட்டில் தங்கவைத்துவிட்டு, நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட கவலைக்கிடமான சம்வம் கந்தபொலையில்இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருப்பவர் கந்தபொல நோனாவத்தைப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 28 வயதுடைய பெருமாள் சரத்பாபு என்பவராவார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விபத்தொன்றில் சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியுள்ள அவரால் கடினமான வேலைகள் எதுவும் செய்யமுடியாது என்பதால் வீட்டில் வடை சுட்டு சிறியதொரு தள்ளுவண்டியில் கொண்டு சென்று விற்று, வந்த வருமானத்தால் தனது பெற்றோரையும், மனைவியின் பெற்றோரையும், தனது மனைவியையும் கவனித்து வந்துள்ளார். இவர் கடன்பட்டு அதனால் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார்.
அவரது மனைவி 8 மாத நிறை கர்ப்பிணியாவார். அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதை வைத்தியர்கள் நிச்சயப்படுத்தியிருந்தனர்.
மனைவிக்கு பிள்ளைப் பேற்றுக்குத் தேவையான பொருட்களையும் இரண்டு பிள்ளைகளுக்கும் உடைகள் சிலவற்றையும் சவர்க்காரம், பவுடர் போன்றனவும் எடுத்துக் கொண்டு மனைவியை அவரது தாய் வீட்டுக்கு கடந்த 8 ஆம் திகதி மாலை நேரம் அழைத்துச் சென்றுள்ளார்.
அன்றிரவு அவர் நஞ்சு அருந்தி கீழே வீழ்ந்து கிடந்திருந்ததை வீட்டார் கண்டிருக்கின்றனர்.
இந்தத் தற்கொலை தொடர்பில் மரண விசாரணையின் போது, அவரது மனைவி பழனிசாமி கமலனி (28) வாக்குமூலம் அளிக்கையில், தனது கணவன் ஏறத்தாள 40,000 ரூபா கடன் பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். குடும்பத்தில் தங்களிடையே எவ்வித பிரச்சினைகளோ, துயரப்படும் விதமாக எதுவுமோ இதுவரை நிகழவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி வைத்தியசாலையி்ல் நுவரெலிய அவசர மரண விசாரணை அதிகாரி ஆர்.ஆர். உடுகமகெதர மரண விசாரணை மேற்கொண்டார். இது தற்கொலைதான் என்பது உறுதியாகியுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment