குமார குணரத்னம் இலங்கை வருகிறார்….!
முன்னிலை சோசலிஷக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார்..!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னிலை சோசலிஷக் கட்சியின் பிரதான உறுப்பினர்களுள் ஒருவரான குமார் குணரத்னம் வெகுவிரைவில் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக அக்கட்சியில் மத்திய குழுக் கூட்டத்தின்போது, தேர்தலில் குமார் குணரத்னம் போட்டியிட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
சிலவேளை, அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான பிரச்சினைகள் எழுந்தால் அக்கட்சி உறுப்பினர் ஷமீர கொஸ்வத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment