மனைவியுடன் சண்டை தனக்குத் தானே தீமூட்டிய நபர் - மல்லாகத்தில் சம்பவம் !!
மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை பிடித்தவர் தனக்குத்தானே தீயிட்டுக் கொண்ட சம்பவம் நேற்;று பிற்பகல் மல்லாகத்தில் இடம் பெற்றுள்ளது. மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் யோகதாசன் வயது 64 என்பவரே தனக்குத்தானே மண்ணெண்னை ஊற்றி தீயில் எரிந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் கூக்குரல் இட்டதைத் தொடர்ந்து வீட்டிற்குச் சென்ற அயலவர்கள் தீயை அணைத்த போதிலும் அவர் மிகவும் மோசமாக எரிந்த நிலையில் தெல்லி ப்பளை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
எனினும் அவருடைய நிலமை கவலைக்கிடமானதாக காணப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நோயளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.
தெல்லிப்பளை பொலிசார் இது சம்பந்தமாக விசார னைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
0 comments :
Post a Comment