மாடறுப்புக்கு எதிரான அமைப்பு மீண்டும் செயற்படுகின்றது…!
இலங்கையில் மாடறுப்பைத் தடை செய்வோம் என்று வாக்குறுதி அளித்த அதிகாரிகள் இதுவரை சரிவர செயற்படாத்தனால், மீண்டும் மாடறுப்புக்கு எதிராக மீண்டும் செயற்படுவதற்கு தாம் முன்வந்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு ஏற்கனவே சத்தியாக்கிரகம் ஒன்றை இவ்வருடம் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகச் செய்தது. அந்நேரம் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கு சமுகந்தந்து அவ்வாறு செயற்படுவதற்கு வாக்குறுதியளித்துச் சென்றனர். அத்துடன் சத்தியாக்கிரகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது சிங்கள ராவய அமைப்பு.
என்றாலும், இதுவரை வாக்குறுதி வாக்குறுதியாக மட்டுமே இருப்பதால் அதற்கெதிராக மீண்டும் குரல் கொடுக்கவுள்ளதாகவும், குறித்த அதிகாரிகளுடன் அதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் அவ்வமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment