இலங்கையின் தடுப்பு காவலில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்க!
இந்தியாவில் நாளை நடைபெறவுள்ள 68 வது சுதந்திர தினத்தையொட்டி, இலங்கையின் தடுப்பு காவலில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யு மாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக, த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
94 இந்திய மீனவர்கள், தற்போது இலங்கை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவ த்தின்போது, அவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும், இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவை வளர்க்கும் நோக்கில், இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கடந்த மே மாதம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
மீனவர் பிரச்சினையானது, இரு நாடுகளுக்குமிடையில் சாதகமற்ற பிரச்சினை களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை அமைச்சர் ராஜித சேனாரட்ன, இலங்கை இந்திய மீனவர் பேச்சு வார்த்தை தொடர்பாக அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு, இந்திய தரப்பின் பதிலை எதிர்பார்த்துள்ளதாக, அண்மையில் தெரிவித்திருந்தார். இவ்வாறு விடுதலை செய்யும் மீனவர்கள், நாளை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய மீனவர்கள் ஒப்படைக்கப்படவுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மீனவர்களை விடுவிப்பதற்கு எடுத்த தீர்மானத்தை, இந்திய மீனவர்கள் பாராட்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment