Tuesday, August 19, 2014

சர்வதேச பாதுகாப்பு மாநாடு கொழும்பில் ஆரம்பமாகியது.

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில், 4வது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாடு, நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

அரச பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் வழிகாட்டலுடன், இலங்கை இராணுவத்தினர், 4வது தடவையாகவும் ஒழுங்கு செய்து ள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாடு, நேற்று கொழும்பில் ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் மூன்று நாட்கள் இடம்பெறும் இம்மாநாட்டில், 66 நாடுகளை பிரதி நிதித்துவப்படுத்தி, 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். 41 இராஜதந்திரிகள் உட்பட 35 பாதுகாப்பு ஆலோசகர்கள், இதில் பங்கேற்பதுடன், உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகள் 10 பேர், மாநாட்டில் உரையாற்றவுள்ளனர். மூன்று தசாப்தகால யுத்தத்தின் இலங்கை அனுபவங்களையும், யுத்தத்திற்கு பின்னரான சவால்கள் தொடர்பிலும், அனுபவங்களை பரிமாறிக்கொள்வதே, இந்த மாநாட்டின் நோக்கம்.

2011ம் ஆண்டில் பாதுகாப்பு மாநாடு, முதல் தடவையாக இடம்பெற்றது. இன்று ஆரம்பமாகியுள்ள மாநாடு, நாளை மறுதினம் நிறைவடையும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com