Wednesday, August 27, 2014

கச்சதீவை இலங்கையிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டுமானால் இலங்கையுடன் யுத்தம் செய்ய வேண்டிவரும்! -முக்குல் ரொஹத்ஜீ

கச்சதீவை மீண்டும் இலங்கைக்குப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் இலங்கையுடன் யுத்தம் செய்ய வேண்டிவரும் என இந்திய எடர்னி ஜனரால் முக்குல் ரஹத்ஜீ குறிப்பிட்டுள்ளார்.

இந்தி உயர் நீதிமன்றத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கச்சதீவை இந்தியாவுக்குப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழகப் பிரதமர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் மற்றும் டீ.எம்.கே கட்சியின் தலைவர் எம். கருணாநிதி முன்வைத்துள்ள முறைப்பாடுகளுடன் தொட்பான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையிலேயே எடர்னி ஜெனரல் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து குறிப்பிடும்போது, 1974 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை கைச்சாத்திட்ட இருதரப்பு புரிந்துணர்வுக்கு ஏற்ப கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது.

அதனால் மீண்டும் இந்தியாவுக்கு கச்சதீவைப் பெற்றுக் கொள்வது என்பது முயற்கொம்பாகவே இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment