பிள்ளையின் சர்வதேச விசாரணைகளுக்கு, சாட்சியமளிக்கும் தகுதி, பிரபாகரனின் மாவீரர் குடும்பங்களுக்கு மாத்திரமே உண்டா?
நவநீதம் பிள்ளையின் சர்வதேச விசாரணைகளுக்கு, சாட்சி யமளிக்கும் தகுதி, வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் குடும்பங்களுக்கு மாத்திரமே உண்டா? இறந்த மற்றும் காணாமல் போன பெற்றோரின் ஒன்றியம், பிரிட்டோ பெர்னாண்டோ மற்றும் நிமல்கா பெர்னாண்டோவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரச சார்ப்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து, மருதானை டீன்ஸ் வீதி இலக்கம் 281 இல் கூடி, இலங்கைக்கு எதிராக சாட்சியமளிப்பது தொடர்பாக, வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர் யுவதிகளை அறிவுறுத்துவதற்கான விசேட கூட்டமொன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தது.
அரசாங்கத்தின் பாதுகாப்பு படையினரால் வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றின் மூலம், நியாயத்தை நிலைநாட்டுவது எவ்வாறு| எனும் தொனிப்பொருளில், அரச சார்ப்ப்றற அமைப்புகளின் செயற்பாட்டாளர்களான பிரிட்டோ பெர்னாண்டோ, நிமல்கா பெர்னாண்டோ உள்ளிட்ட சிலர் இந்த செயற்பட்டறையை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்கு மேற்கின் சில தூதரக அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப்பெற்றிருந்தமை, அவதானிக்க முடிந்தது. எல்ரிரிஈ பயங்கரவாதம் காரணமாக தெற்கில் காணாமல் போனோர் தொடர்பாக எந்தவொன்றும் இந்த பேச்சுவார்த்தையில் உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை. பிரிட்டோ பெர்னாண்டோவின் இந்த வேலைத்திட்டம் தொடர்பாக, விசேட சந்திப்பொன்று, ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதில் பயங்கரவாதிகளினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்கள் தொடர்பாக எந்தவொன்றும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பாக மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, காணாமல் போன மற்றும் உயிரிழந்தவர்களின் பெற்றோரின் ஒன்றியம், நேற்று அவ்விடத்திற்கு சென்று, அரச சார்ப்பற்ற செயற்பாட்டாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இது தொடர்பான உண்மை தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு, இறந்த மற்றும் காணாமல் போனோரின் பெற்றோர்கள் ஒன்றியம் இன்று முற்பகல் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அங்கு அதன் ஏற்பாட்டாளர் சங்கைக்குரிய அங்குருகல்லே ஸ்ரீ ஜினானந்த தேரர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment