'இலங்கையில் வறிய ஊர்கள் எதுவுமில்லை..' பொய் சொல்கிறார் ஹரீன்! - ஷசீந்ர
இன்று இலங்கையில் கஷ்டமான ஊர்கள் என்று சொல்லு மளவிற்கு ஒரு ஊரும் இல்லை என கூட்டணியின் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஷசீந்ர ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
மொனராகல, கஹம்பான பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அங்கு அவர்,
“ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பதுளையிலிருந்து ஒருவர் தேர்தலில் போட்டியிடுகின்றார். இவர் என்னதான் சொல்கிறார்? இந்த மாகாணத்தில் இருக்கின்ற அப்பாவி மக்களின் அபிமானத்தை மறைக்கின்றார். இலங்கையில் வறியவர்கள் அதிகம் வாழ்கின்ற மாகாணமாக மொனராகலை இருப்பதாகச் சொல்கிறார். ஏழைகள் இல்லாமல் இல்லை.. இருந்தாலும் எல்லோரும் வறியவர்களே என்கிறார். ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்தில் மனிதர்களிடம் ஒரு சதமும் இல்லாதவர்கள் இருந்தார்கள். இன்று அப்படியானவர்கள் மொனரகலையில் இல்லை. இன்று விவசாயம் ஓங்கியுள்ளது. தொழில் அற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுக் கொடுத்துள்ளோம். பட்டதாரிகள் 6000 பேருக்கு தொழில்வாய்ப்புப் பெற்றுக் கொடுத்துள்ளோம். என்னிடம் தொழில் கேட்டுவந்தவர்கள் 14,000 பேர் இருக்கின்றார்கள். அவர்களில் 9000 பேருக்கு தொழில் வழங்கிவிட்டேன். இன்னும் தொழில் வழங்க வேண்டியவர்கள் இருக்கின்றார்கள்” எனவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment