ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த இந்திய அரசு தீவிரம்!
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளி களுக்கு தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த இந்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது.
1991 ஆம் ஆண்டு தமிழ் நாடு ஸ்ரீ பிரெம்புதூரில் வைத்து முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலை குண்டு தாக்குதலுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட் டார். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகன் நளினி, சாந்தன், பேரறிவாளன், ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பின்னர் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஏனைய மூவரும் தமது தண்டனையை குறைக்கும் படி ஜனாதிபதியி;டம் கருணை மனு சமர்ப்பித்தனர். அந்த கருணை மீது 11 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இக்கால தாமதத்தை காரணம் காட்டி குற்றஞ்சுமத்தப்பட்ட மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இம்மூவரின் து{க்குதண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைத்தது. அவர்களை விடுவிப்பது பற்றி மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாமென்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால் ராஜீவ் கொலை குற்றவாளிகள் அனைவரும் விடுதலையாவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அப்போதைய காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொலையாளிகளை விடுதலை செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவை பெற்றுக் கொண்டது. இது தொடர்பாக மத்திள அரசு விரிவான பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையில் கடந்த மே மாதம் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜீவ் கொலை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்க தீவிரமாகவுள்ளது. புதிய சொலிசிட்ட ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சித் குமார் ராஜீவ் கொலை குற்றவாளிகளை தூக்கில் போடலாமென்று கருத்து தெரிவித்தார். இம்மூவரையும் தூக்கில் இடுவதை உறுதி செய்யும் வகையில் தனிப்பட்ட சிறப்பு மனுவாக அம்மனுவை தாயாரித்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment