Saturday, August 2, 2014

பிரபாகரனை என்னிடம் கொடுங்கள் யாழ்பாணத்தில் தூக்கிலிடப்போகின்றேன். ரஜீவிடம் கேட்ட ஜேஆர்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனா 1986 பெங்களுரில் இடம்பெற்ற சார்க் மாநாட்டின்போது அன்றைய பாரத பிரதமர் ரஜீவ் காந்தியை பிரத்தியமாக சந்தித்திருக்கின்றார். அப்போது அவர் பாரத பிரதமரிடம் 'பிரபாகரனை என்னிடம் கையளியுங்கள், அவனை தமிழ் மக்களின் தலைவரான அன்றைய யாழ் மேயர் துரையப்பா சுடப்பட்ட இடத்தில் துக்கிலிடப்போகின்றேன்' எனக் கேட்டுள்ளார். இவ்விடயத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ரஜீவ் அரசாங்கத்தின் உறுப்பினரும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான நட்வார் சிங் எழுதியுள்ள 'One Life is Not Enough' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

1986 களில் தாங்கள் பிரபாகரனை பெங்களுரில் மறைத்து வைத்திருந்தாகவும் இதை ஏதோ ஒரு வழியில் அறிந்து கொண்ட ஜேஆர் ஜெயவர்த்தனா இக்கோரிக்கையை முன்வைத்தாக அவர் குறிப்பிடுகின்றார்.

தான் பிரபாகரனை 1987 இல் சந்தித்தபோது 'என்றோ ஒரு நாள் இலங்கை-இந்திய இராணுவங்களை நீர் ஒன்றாக எதிர்கொள்ளவேண்டியதோர் கடினமான காலம் வருமென்றும் அதற்கு முன்னர் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்வது சிறந்தது' என்றும் எச்சரித்திருந்தமையை தனது 400 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் விபரித்துள்ளார்.

மேலும் ராஜீவ் காந்தி , பஞ்சாப் - அசாம் பிரச்சினையை கையாண்டு கொண்ட வெற்றியின் வேகம் மற்றும் அதன் அனுபவங்களை கொண்டு இலங்கைத் தமிழரின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முழு அளவில் இறங்கியிருந்ததாகவும் பிரபாகரனின் குள்ளநரி குணங்களை கருத்தில் கொள்ள மறுத்து விட்டதாகவும் கூறிப்பிட்டுள்ளார். தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்னர் ராஜீவ் காத்தியிடம் 'பிரபாகரனிடம் விடயங்களை எழுத்தில் பெற்றுக்கொண்டீர்களா' எனக்கேட்டபோது 'அவர் எனக்கு வாக்குறுதி தந்திருக்கின்றார்' என பதிலளித்தாராம் ஆத்திரமடைந்த ரஜீவ் காந்தி. அத்தருணத்தில் தான் ' நீங்கள் பிரபாகரனிடமிருந்து எழுத்தில் விடயங்களை பெற்றிருக்கவேண்டும் , அவரது வார்த்தைகள் பெறுமதி அற்றவை , தமக்கு தேவைப்படுகின்றபோது அவர்கள் இந்தியாவின் முகத்தில் கரிபூசுவதற்கு தயங்கமாட்டார்கள், இது வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றது' என்று ரஜீவுக்கு தெரிவித்தாக புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com