Thursday, August 21, 2014

பயங்கரவாத செயற்பாட்டாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் இணைவதைத் தடுக்க வேண்டுமாம்! -ரொஹான்

பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புபட்ட, பயங்கரவாத செயற்பாட்டாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரதான அரசியல் செயற்பாட்டுக்குள் இணைவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் வன் முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான மையத்தின் தலைவர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில தரப்பினர் இன்னமும் பிரிவினைவாத நோக்கங்களைக் கொண்டவர்களாகக் காணப் படுகின்றனர். இவ்வாறான வர்கள் அரசியலுக்குள் வருவதன் மூலம் நாட்டில் மீண்டுமொரு அழிவுச் சூழல் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பிரிவினைவாத நோக்கம் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரதான அரசியலு க்குள் நுழைய அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் பாரிய தவறிழைத்துவிட்டது. 2009ஆம் ஆண்டே இதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் அரசியலுக்குள் வருவதைத் தடுப்பதற்கு புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று ஏற்பாடு செய்திருந்த 'மோடியின் கீழ் இந்தியா, இலங்கை இந்திய உறவின் திருப்புமுனை' எனும் தொனிப் பொருளிலான விரிவுரையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com