மலையகத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நஷ்டஈடு! (படங்கள் இணைப்பு)
நுவரெலியா மாவட்டத்தில் சென்ற வருடம் (2013) ஜனவரி மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் 30 திகதி வரை மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு பாதிக்கப்பட்டவா்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அனா்த்த முகாமைத்துவ நிலையத்திலிருந்து 20 மில்லியன் ரூபா நிதி தனது காரியாலயத்திற்கு கிடைத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜீ குமாரசிரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அப்பகுதிகளை சோ்ந்த பிரதேச செயலாளா் காரியாலயங்களுக்கு இந்த நிதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிதியை பிரதேச செயலாளரினால் எதிர்வரும் தினங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜீ. குமாரசிரி எனவும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் 2013 வருடம் முதல் 2014ம் வருடம் மே மாதம் 30 திகதிவரை முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த 914 வீடுகளுக்களை சோ்ந்த குடும்பங்களுக்கு இந்த நிதியை வழங்கவுள்ளதாகவும் மாவட்ட செயலாளா் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment