Wednesday, August 20, 2014

உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுள் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஆறு....! - கல்வியமைச்சர்

இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஆறு, உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளதுடன், தென் ஆசியாவிலுள்ள 100 முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஆறும் இடம்பெற்றுள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க குறிப்பிட்டார்.

கொழும்புப் பல்கலைக்கழகம் தென்னாசியாவில் 24 ஆம் இடத்தைப் பிடித்துள்ளதுடன் உலக தரவரிசையில் 2146 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. தொடர்வரிசையில் 31 ஆம் 32 ஆம் இடத்தையும், உலகத் தரவரிசையில் 2417 மற்றும் 2897 ஆம் இடங்களை மொறட்டுவைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

கடந்த காலத்தில் தரவரிசைப்படுத்தலில் சற்றுப் பின்னிலையில் இருந்த ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மிகவும் வேகமாக முன்னேறியுள்ளதுடன், இலங்கைப் பல்கலைக்கழக தரப்படுத்தலில் 4 ஆவது இடத்தையும் தெற்காசியாவில் 51 ஆவது இடத்தையும், உலகத் தரவரிசையில் 3091 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

களனிப் பல்கலைக்கழகம் மற்றும் றுகுணுப் பல்கலைக்கழகம் தொடர்வரிசையில் 56 மற்றும் 70 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. உலகத் தரவரிசையில் அப்பல்கலைக் கழகங்கள் 3194 மற்றும் 3483 ஆம் இடங்களைப் பெற்றுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com