பெண் ஒருவரை கொன்ற சிறுத்தையை வன திணைக்கள அதிகாரிகள் பிடித்தனர்!
நாவலப்பிட்டி பார்கேபல் பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி பெண் ஒருவரை தாக்கி கொன்ற சிறுத்தையை வன திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர் பிடிக்கப்பட்ட சிறுத்தையை தெஹிவளை மிருககாட்சிசாலையில் ஒப்ப டைத்ததாக வன திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின் றனர்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் தோட்டபுற பகுதி ஒன்றில் 10.08.2014 அன்று இரவு வேளையில் குறித்த ஏழு வயது நிரம்பிய சிறுத்தையை வன திணைக்கள அதிகாரிகள் பிடித்ததாக தெரிவிக்கின்றனர்.
மேற்படி சிறுத்தையை வனபகுதிகுள் விடுவித்தாள் மக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் என்பதால் தற்காலிகமாக அதனை தெஹிவளை மிருககாட்சிசாலைக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க தீர்மானித்ததாக வன திணைகள பணிப்பாளர் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment