Thursday, August 14, 2014

மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செலுத்த புதிய முறை! வருகின்றார் தபால் காரர்!!

மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செப் டெம்பர் முதலாம் திகதி முதல் தபால் காரர்குளிடம் செலு த்தலாமென, தபால் மா அதிபர் ரோஹன அபேரட்ன தெரி வித்துள்ளார்.

தபால் காரர்களிடம் இக்கட்டணங்களை செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டு ள்ள அமைச்சர், இதற்கமைய ஆரம்ப கட்டமாக தபால்காரர் ஒருவர் நாளொன்றுக்கு ஆகக்கூடியது 20 ஆயிரம் ரூபா வரை இக்கட்டணங் களுக்காக சேகரிக்க முடியுமென கூறினார்.

வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணங்களுக்கான பற்றுச்சீட்டுகள், தபால் காரர்களினால் வழங்கப்படும் அதேவேளை, இவ்வாறு தபால் காரர்களினால் சேகரிக்கப்படும் பணத்திற்கு உத்தரவாதமளிக்கும் வகையில், காப்புறுதி திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்குமென்றும், அவர் தெரிவித்தார்.

தபால் காரர்கள், தமது கடமை நேரத்தில் தபால் விநியோகத்திற்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும், தபால் திணைக்களம் மற்றும் தபால் முகவர் நிலையங்களுக்கு ஆதாயம் தேடும் நோக்கிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுளதாகவும், தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டம் வெற்றியளித்துள்ளதை தொடர்ந்து, நாடு முழுவதும் இதனை நடைமுறைப்படுத்தக்கோரி அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்ப்பித்ததாகவும், தபால் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com