உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் இலங்கையில நுழைவதை தடுக்க விசேட நடவடிக்கை!
உலகம் முழுதும் பரவிவரும் வைரஸ் உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் இலங்கையில நுழைவதை மற்றும் பரவுவதை தடுக்க விசேட மருத்துவ குழுக்கள் சுகாதார பிரிவினர் விமான தளங்களில் பாதுகாப்பு கருதி சேவைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ் உயிர் கொல்லி நோய் உலகின் மேற்கு ஆபிரிக்க நாடுகளான கினியா, சியர்ரா லியோன், நைஜீரியா மற்றும் லைபீரியாவில் மிக வேகமாக பரவிவருகிறது எனவும் இவ் உயிர் கொல்லி நோயினை இல்லாதொழிக்க 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக உலகவங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் எபோலா வைரஸ் பரவுவதை தடுக்காவிட்டால் பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை நினைத்து நான் கவலைப்படுகிறேன். வைரஸின் விளைவுகளை நான் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அது சுகாதாரத் துறை ஊழியர்கள், குடும்பங்கள், சமூகத்தை அழித்து இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
வழங்கப்படும் நிதி மருத்துவ உதவிகள், சுகாதார உதவிகள் முதலானவற்றை தேவையானயளவில் வழங்குவதன் மூலம் நோயினை பரவ விடாமல் தடுக்க முடியுமென தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள் வரையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி 887 பேர் இதுவரையில் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment