Tuesday, August 5, 2014

குராம் ஷேக்கை படுகொலையின் குற்றவாளிகளுக்கு தண்டனை போதாது - சட்டமா அதிபரினால் மேன்முறையீடு தாக்கல்

குராம் ஷேக்கை படுகொலை வழக்கில் தங்காலை பிரதேச சபையின் தலைவரான சம்பத் சந்திர புஷ்ப விதானபதிரண உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு, 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி வல்கம, கடந்த ஜூலை 18ஆம் திகதி தீர்ப்ப ளித்தார்.

எனினும் பிரித்தானிய பிரஜையான குராம் ஷேக்கை படுகொலை செய்து அவரது காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை என்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபரினால் நேற்று மேன்முறையீ டொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலத்தைக் குறைக்குமாறு கோறி, குற்றவாளிகளால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, சட்டமா அதிபரும் மேற்கண்ட மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

குராம் சேக்கை கொலை செய்ததற்காக 20 வருட கடூழிய சிறை தண்டனையும் விக்டோரியாவை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதற்காக 20 வருட கடூழிய சிறை தண்டனையும் விதித்த நீதபதி இவ்விரு தண்டனைகளையும் ஒரே தடவையில் அனுபவிக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 2 இலட்சம் வீதம் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி அனைத்து குற்றவாளிகளுக்கும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com