விமலின் கட்சி ஊவாவில் பஞ்சாயுதத்தில்.. இன்று கையொப்பமிட்டனர்!
ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் இன்று (03) பத்தரமுல்லையில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் கையொப்பமிட்டனர்.
இந்நிகழ்வில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், அமைச்சர் விமல் வீரவங்ச, பொதுச் செயலாளர் பிரியந்த விதாரண, பெயர்ப் பிரேரணைக் குழுவின் முக்கிய பிரமுகர், அரசியல் செயற்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் பியசிரி விஜேநாயக்க, ஊடகப் பேச்சாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பதுளை மாவட்டத்திற்கு வழக்கறிஞர் சமிந்த மகாநாம, சரத் தென்னகோன் உள்ளிட்ட குழுவினரும் மொனராகலை மாவட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேக்கரவின் தலைமையின் கீழான குழுவொன்றும் கையொப்பமிட்டனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment