Tuesday, August 26, 2014

பாகிஸ்தான் இராணுவப்படைத் தளபதி இலங்கை விஜயம்!

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சிப் மார்ஷல் தாஹிர் ஹபீக் பட் நாளை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

எயார் மார்ஷல் கே.ஏ. குணத்திலக்கவின் அழைப்பை ஏற்று இலங்கை வருகைதரவுள்ள இவர், மூன்று நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளார்.

இவ்விஜயத்தின்போது, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பலரை பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி சந்தித்துப் பேசவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

(கேஎப்)

1 comment:

  1. Wellcome, look about freedom for Kashmir please.

    ReplyDelete