Saturday, August 9, 2014

மீனவர் பிரச்சனையும் தமிழ் தேசியத்தின் நழுவல் போக்கும். ஜோசப் மகேந்திரன்

உடன்பிறந் தார்களைப் போல் –இவ்வுலகில் மனிதரெல் லாரும்
இடம்பெரி துண்டுவை யத்தில் –இதில்
ஏதுகுச் –சண்டைகள் செய்வீர்?
(பாரதி)

மீனவர் பிரச்சினை இன்று நேற்று நடப்பவையல்ல நீண்டகாலமாக இது தொடர்கதையாக உள்ளது. நவீன தொழில் நுற்ப்பம் வருவதர்கு முன்பும்
இருநாட்டவர்களும் ஒருவரை ஒருவர் சுக நலம் விசாரிப்பது வழக்கம் கடலின் நீரோட்டம் அவர்களை வெவ்வேறுதிசைகளுக்கு கொண்டு செல்லும்ஐக்கியம் நட்பு இவைகளுக்கு இருப்பதின் நோக்கம் இருவரும் மீனவர்கள் என்ற ஒரேஒரு காரணம்தான். தொழில்போட்டி காரணமாகவும் நவீன உபகரனத்தின் காரணமாகவும் அத்துமிறல் எங்கள் மீனவர்களின் வலையில் அகப்படுகின்ற மீன்களை இரவோடுஇரவாக களவாடிசென்றது பழையபுராணம்.

புதியகதை யாதெனில் இலங்கையின் உள்நாட்டு யுத்ததுக்குப்பின் அவர்கள் எங்கள் கடல் வழங்களை அத்துமிறுகின்றது கண்டிக்கப்படவேண்டிய விஷயம், இதை ஏன் தமிழ்தேசிய கூட்டைமைப்பு கண்டிக்கவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு கானமுடியாத்தர்க்கு காரணம் தமிழ்தேசியத்தின் உறவினர்கள்
அவர்களின் சொத்து எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கின்றகாரணத்தினாலும் சிங்கள அரசை பழிவாங்கவேண்டுமென்ற நற்பாசையினாலும் சொந்தமக்களுக்கு துரோகம் செய்கின்றர்கள்.

இதை கருத்தில் கொண்டே எங்கள் மக்களின் பிரச்சினையை அனுகவேண்டுமே ஒழிய பாராமுகமாக இருப்பதர்க்கு காரணம் நழுவல் போக்கே காரணமாகும். அந்தமக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதர்க்கு அந்தமக்களின் பிரதிநிதிகளே தேவை ஒழிய தமிழ்தேசியம் அல்ல! அந்த மக்கள் தங்கழுடைய தொழில்செய்வதக்காக வங்கிகடன், தங்களுடைய தங்க நகைகளையெல்லாம் அடைவு வைத்தல், தானியாரிடம் வட்டிக்கு வாங்குவது தங்களுடைய பரம்பரைத்தொழிலைசெய்வதர்க்கு அவர்களுடைய முதலீடாகும். இதை அரசியலாக்கி தங்களை தக்கவைத்துக்கொள்வது படு பிற்போக்குத்தனமாகும். தங்களுடைய அரசியல் வெற்றியின் இலக்கையடைய மக்கள் ஐக்கியப்படவேண்டியதின் காலமும் நேரமும்
இப்பொழுது கனிந்துள்ளது.

நாம் ஒரு நிர்வாகக்கட்டமைபுக்கொண்ட ஒரு பாடசாலை நிர்வாகத்தை உங்கள் நினைவில்கொள்ளவும், அந்த பாடசாலையில் மாணவர்கள் கல்வி
உயர்வுக்கும் பாடசாலையின் வளர்ச்சிக்கும் அந்த ஆசிரியர்கள் எவ்வளவு முயர்ச்சிசெய்கிறர்கள் என்பதை மக்களுக்கும் மாணவர்களும் அந்தகிராம மக்களுக்கும் தெரிவதுபோல மாகணநிர்வாக அமைப்புமுறையும் அப்படிதான். இந்த நிர்வாகக்கட்டமைப்பின் மூலமாக சுயநலமில்லாது மக்களின் துன்பதுயரங்களை போக்குவதர்கான நிர்வாகமே ஒழிய வேறேன்றுமிலை.

1965ம் ஆண்டு ஸ்ரீ மாவோபண்டாரநாயக்க ஏற்படுத்திய உள்நாட்டு உற்பத்திகளையும், மீன்பிடி, சிறுவிவசாயம், பெருவிவசாயம், தென்னை பனை,
உற்பத்தியினை ஊக்குவிப்பதன் மூலமாக மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்காமல், வெளிநாட்டு நாணயத்துக்கு பிராச்சாரம் செய்யும் அரசியல் வாதியாக இருப்பதினால் சொந்தமக்களுக்கு நம்பிக்கைகொடுக்காமல் தங்கள் குடும்பநல அரசியல் செய்ய மக்கள்தான் இவர்களை தெரிவுசெய்தவர்கள்.

ஆகவே மக்களுக்கு பாரியபொறுப்புள்ளது இவர்களை அப்புறப்படுத்துவதர்க்கு,மக்களே சிந்தியுங்கள்.! மீன் பிடி பிரச்சினை பற்றி நாம் நீண்டகாலமாக அவதானித்து வருகின்றோம். இந்தியாவின் அரசியல்வாதிகளின் ஊடகஅறிக்கை, மற்றும் ரி.வி நிகழ்ச்சியிலும்,இவைகள் பதிவு செய்யப்பட்ட விஷயத்துக்குகூட கூட்டமைப்பு மறுப்பு தெரிவிக்கவில்லை ஏன்? மெளனம்!

யாழ்ப்பாணசாதியதின் மிகவும் கீழ்தன அரசியலுக்கு வடபகுதி மீனவர்களின் பிரச்சினை ஒர் நல்ல உதாரணம். தமிழ் தேசியத்தின் நழுவல் போக்கு.
சிங்களதேசித்துக்கு பதிலாக தமிழ்தேசியத்தை அதிகாரத்திலிருந்து தூக்கியேறிவதன் மூலமாக மக்களுக்கு
இனி ஒரு தொல்லையும் இல்லை –பிரி
வில்லை,குறையும் கவலையும் இல்லை. (பாரதி)

(தொடரும்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com