வடக்கின் அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நிதி எங்கே??? மத்திய அரசாங்கம் வட மாகாண சபையிடம் கேள்வி
வடக்கின் அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நிதி அபிவிருத்தி திட்டங்களுக்கு உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை யென மத்திய அரசாங்கம் வட மாகாண சபைக்கு குற்றஞ்சாட்டியுள்ளது.
வடக்கின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 2014 ஆம் ஆண்டுக்காக மத்திய அரசாங்கம் வட மாகாண சபைக்கு ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. எனி னும் இதுவரை இதில் 189 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. இந் நிலைமையில் எஞ்சிய தொகை பணத்தை திறைசேரிக்கு திரும்பிச் செல்லாத வகையில் வட மாகாண மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கு மாறு வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மாகாண செயலாளர்களை கேட்டுள்ளார்.
இப்பணம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அபிவிருத்தி திட்டங்களுக்காக பயன்படுத்தப்படாவிடின் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
அரசாங்கத்தினால் வட மாகாண சபைக்கு வழங்கும் நிதி அதே விதமாக செல விடப்படாத போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் களும் மாகாண முதலமைச்சரும் அரசாங்கம் மாகாண சபைக்கு நிதியொதுக்குவதில்லை யென சர்வதேசத்திற்கு கூறி வருகின்றனர். எனினும் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென்றும் அரசாங்கம் அபிவிருத்திக்கு வழங்கிய 1300 மில்லியன் ரூபாவில் 189 மில்லியன் ரூபாவை மாத்திரம் செலவிட்டிருப்பதன் மூலம் இது தெளிவாகின்றதென ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் மாகாண செயலாளர்களுக்கு இதுபற்றி தெளிவுப்படுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment