அடுத்த வரவு - செலவுத் திட்டத்தின்போது அரச ஊழியர்ரகளுக்கான சம்பள அதிகரிப்பு நிகழும்!
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்படலாம் எனவும், கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு கவர்ச்சிகரமான ஒதுக்கீடு நிகழலாம் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிடுகிறார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போது, குறைந்த வருமானம் உடைய மற்றும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கருத்திற்கொண்டு இம்முறை வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment